"கவர்னர்களை நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்" - உத்தவ் தாக்கரே கருத்து
கவர்னர்களை நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் மதிப்பு மிக்க அடையாளமாக திகழும் சத்ரபதி சிவாஜியையும், சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே, சாவித்ரி பூலே ஆகியோரை அவமதிக்கும் வகையில் அந்த மாநிலத்தின் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பேசி இருப்பதாக மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளர.
கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்றும் கவர்னரை நியமிப்பதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அவர், இதற்கு ஏற்ப சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கர்நாடகாவுடனான எல்லைப் பிரச்சினை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவசேனா கட்சி உடையவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அது வலுவடைந்து வருகிறது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story