தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் அறிக்கை வெளியீடு: 2018-19-ல் அரசின் சுகாதாரச் செலவு குறைவு


தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் அறிக்கை வெளியீடு: 2018-19-ல் அரசின் சுகாதாரச் செலவு குறைவு
x
தினத்தந்தி 12 Sep 2022 7:48 PM GMT (Updated: 12 Sep 2022 7:49 PM GMT)

2018-19-ம் ஆண்டிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கை வெளியிடபட்டது. இதில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதார செலவு குறைந்துள்ளது.

புதுடெல்லி:

2018-19-ம் ஆண்டிற்கான இந்தியாவிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் முன்னிலையில் நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர். வினோத் கே. பால், வெளியிட்டார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தால் 2014-ல் தேசிய சுகாதார கணக்குகள் தொழில்நுட்ப செயலகமாக நியமிக்கப்பட்ட தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் தயாரித்த ஆறாவது தொடர்ச்சியான சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கை இதுவாகும்.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார கணக்குகளின் அமைப்பு 2011-ன் அடிப்படையில் கணக்கியல் கட்டமைப்பைப் பயன்படுத்தி தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

2018-19-ம் ஆண்டிற்கான மதிப்பீடுகள், சுகாதாரத்திற்கான அரசு செலவினங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பொது சுகாதார முறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதையும் காட்டுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அரசாங்க சுகாதார செலவு %

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதாரச் செலவினத்தின் பங்கு 1.15% (2013-14) ஆக இருந்து 1.28% (2018-19) ஆக அதிகரித்து இருந்தாலும் 2017-18 ல் 1.35% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த சுகாதார செலவினத்தில் அரசு சுகாதார செலவினத்தின் பங்கு 28.6% (2013-14) ஆக இருந்து 40.6% ஆக (2018-19) அதிகரித்துள்ளது. இது 2017-18 ஆம் ஆண்டில் 40.8% ஆக உள்ளதை விட குறைந்திருப்பது குறிப்பிடதக்கது.


Next Story