பெலகாவியில் அசுத்த நீர் குடித்ததால் பலியான பெண் உள்பட 2 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்; மந்திரி கோவிந்த் கார்ஜோள் அறிவிப்பு


பெலகாவியில் அசுத்த நீர் குடித்ததால் பலியான பெண் உள்பட 2 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்; மந்திரி கோவிந்த் கார்ஜோள் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 6:45 PM GMT (Updated: 28 Oct 2022 6:47 PM GMT)

பெலகாவியில் அசுத்த நீர் குடித்ததால் பலியான பெண் உள்பட 2 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகாவில் முதேனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மூலமாக கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிகறது. இந்த நிலையில், கிராம பஞ்சாயத்தில் இருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த 96 பேருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது வாந்தி மற்றும் பேதி உண்டானது. இதையடுத்து, முதேனூர் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 96 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிவப்பா மற்றும் சரஸ்வதி ஆகிய 2 பேரும் பலியாகி இருந்தார்கள். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல்நிலை நிர்தேக்க தொட்டியை பஞ்சாயத்து ஊழியர்கள் சுத்தம் செய்யாததால், அந்த தண்ணீர் அசுத்தமாகி, அதனை குடித்த 2 பேர் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பெலகாவியில் அசுத்த தண்ணீரை குடித்து பலியான சரஸ்வதி, சிவப்பாவின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி கோவிந்த் கார்ஜோள் அறிவித்துள்ளார். மேலும் தண்ணீர் அசுத்தமானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.


Next Story