விபத்தில் காலை இழந்த மைனர் பெண்ணுக்கு ரூ.28 லட்சம் நிவாரணம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


விபத்தில் காலை இழந்த மைனர் பெண்ணுக்கு ரூ.28 லட்சம் நிவாரணம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

விபத்தில் காலை இழந்த மைனர் பெண்ணுக்கு ரூ.28 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவை சேர்ந்தவர் சுப்ரியா (வயது 17). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஹரிஹரா பகுதியில் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சுப்ரியா மீது மோதியது. இந்த விபத்தில் சுப்ரியாவின் ஒரு கால் துண்டானது. தற்போது அவர் செயற்கை கால் உதவியுடன் நடந்து வருகிறார். இந்த விபத்து குறித்த வழக்கு ஹரிஹராவில் உள்ள மோட்டார் விபத்து இழப்பீடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் சுப்ரியாவுக்கு ரூ.7.24 லட்சம் இழப்பீடு வழங்க காரின் உரிமையாளருக்கு கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் காரின் உரிமையாளர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்த நிலையில் நேற்று முன்தினம் இறுதி விசாரணை நடந்தது. அப்போது வாழ வேண்டிய வயதில் காலை இழந்து செயற்கை காலை பொருத்தி சுப்ரியா நடந்து வருவதாக கூறிய நீதிபதி சந்தேஷ், சுப்ரியாவுக்கு ரூ.27.97 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.


Next Story