பெண்ணின் கண்ணில் குத்திய 'டூத்பிரஸ்' அகற்றம்
ஹாவேரியில் பெண்ணின் கண்ணில் குத்திய ‘டூத்பிரஸ்’ அகற்றப்பட்டது.
ஹாவேரி:
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா ஹிரூரு கிராமத்தை சேர்ந்தவர் வினோதா (வயது 28). இவரது 4 வயது மகள் கடந்த 14-ந்தேதி பல் துலக்கி கொண்டிருந்தாள். அப்போது வினோதா, மகளின் அருகே நின்று ெகாண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக வினோதாவின் கண்ணில் மகள் துலக்கி கொண்டிருந்த 'டூத் பிரஸ்' குத்தியது. மேலும் அந்த டூத் பிரஸ், வினோதாவின் கண்ணுக்குள் ஆழமாக குத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அந்த டூத் பிரசை எடுக்க முயன்றனர்.
ஆனால் அது பாதியாக உடைந்தது. ஒரு பாதி வினோதாவின் கண்ணுக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, கண்ணுக்குள் சிக்கியிருந்த பாதி டூத் பிரசை அகற்றினர். ஆனாலும் அவருக்கு கண்ணில் பலமான காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.