சிறுமியின் உள்ளாடையை அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம்..! ஹைகோர்ட் அதிரடி


சிறுமியின் உள்ளாடையை அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம்..! ஹைகோர்ட் அதிரடி
x

சிறுமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், வாலிபரின் செயல் காரணமாக அந்த சிறுமி மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார் என கூறப்பட்டது.

கொல்கத்தா

மேற்குவங்காளம் கொல்கத்தாவில் கடந்த 2007ம் ஆண்டு மே 7 அன்று சாலியில் சிறுமி ஒருவர் தனியாக நடந்துச் என்று உள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியிடம் பேசி, பாலம் ஒன்றிற்கு கீழே தனியாக அழைத்து சென்று அவரின் உள்ளாடையை கழற்ற சொல்லி இருக்கிறார்.

முதலில் அந்த சிறுமி மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரின் கீழ் உள்ளாடையை கழற்றும் படி கூறி ராபி ராய் வற்புறுத்தி உள்ளார். இதை கேட்காமல் அந்த சிறுமி கண்ணீர்விட்டு கதறி அழுது உள்ளார். ராபி ராய் அந்த சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உடையை கழற்றி உள்ளார். சிறுமியின் கீழாடையை கழற்றி உள்ளார்.

அதன்பின் அவரின் உள்ளாடையையும் கழற்றி உள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வாயை மூடி இருந்த கையை அகற்றிவிட்டு கதறி கத்தி உள்ளார். இதை கேட்டதும் அருகில் இருந்த சிலர் அங்கே ஓடி வந்துள்ளனர்.

இதையடுத்து ராபி அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராபியை கைது செய்தனர். இதையடுத்து கீழமை கோர்ட் இதில் வழங்கிய தீர்ப்பில் ராபிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் ராபி மேல்முறையீடு செய்தார். அதோடு அந்த சிறுமி சார்பாக ராபியை எதிர்த்து இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் நான் அந்த சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட் இதை உறுதி செய்து உள்ளது. அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று வாதம் வைத்தார். அப்படி இருக்கும் போது இதை பலாத்காரமாக கருத கூடாது என்று வாதம் வைத்தார்.

அந்த சிறுமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், வாலிபரின் செயல் காரணமாக அந்த சிறுமி மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு எதிரான தண்டனையை நீக்க கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடையை அவரின் அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம். அதனால் இந்த தண்டனையை நீக்க முடியாது என்று கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.


Next Story