கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1.29 கோடி வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1.29 கோடி வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்
x

மாநில சட்டசபை தேர்தல்களில், நோட்டாவிற்கு 64.53 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாரா அமைப்பு(ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மாநில மற்றும் பொதுத்தேர்தல்களில் நோட்டாவுக்கு சுமார் 1.29 கோடி வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் 2022 வரை நடைபெற்ற தேர்தல்களில், நோட்டா சின்னத்திற்கு கிடைத்த வாக்குகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையை ஏ.டி.ஆர். அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மாநில சட்டசபை தேர்தல்களில், நோட்டாவிற்கு 64 லட்சத்து 53 ஆயிரத்து 652 வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மற்றும் டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் நோட்டாவிற்கு அதிகமாக 1.46 சதவீத வாக்குகள்(பீகாரில் 7,06,252 வாக்குகள், டெல்லியில் 43,108 வாக்குகள்) கிடைத்துள்ளன.

அதே போல 2022-ல் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டாவிற்கு குறைந்த அளவில் வாக்குகள்(0.70 சதவீதம்) பதிவாகியுள்ளன. அதன்படி கோவாவில் 10,629 வாக்குகள், மணிப்பூரில் 10,349 வாக்குகள், பஞ்சாபில் 1,10,308 வாக்குகள், உத்தர பிரதேசத்தில் 6,37,304 வாக்குகள் மற்றும் உத்தரகாண்டில் 46,840 வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்துள்ளன.


Next Story