இறைச்சிக்காக லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்பு; இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்


இறைச்சிக்காக லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்பு; இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்
x

சொரப்பில் இறைச்சிக்காக 2 லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த லாரிகளை இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்.

சிவமொக்கா;

இந்து அமைப்பினர் மடக்கினர்

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஜடே அருகே காளிகேரி கிராமத்தில் 2 லாரிகளில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகள் கடத்தி செல்வதாக இந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து அமைப்பினர் காளிகேரி கிராமத்தில் வைத்து 2 லாரிகளையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அப்போது ஒரு லாரியில் இருந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். மற்றொரு லாரியில் இருந்த 2 பேரையும் இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்.இதுபற்றி இந்து அமைப்பினர், ஆனவெட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


18 மாடுகள் மீட்பு

அப்போது பிடிபட்ட 2 பேரையும் இந்து அமைப்பினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 லாரிகளிலும் மாடுகள் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அங்கரவள்ளி கிராமத்தை சேர்ந்த முகமது ஹாரீப், ரஹ்மான் என்பதும், இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மாடுகளை போலீசார் மீட்டனர். அந்த மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து ஆனவெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story