தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு
தாயை பிரிந்த குட்டி யானை மீட்கப்பட்டது.
பெங்களூரு: ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பூஹள்ளி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு குட்டி யானை சுற்றி திரிந்தது. பின்னர் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளுடன், அந்த குட்டி யானை கிராமத்திற்கு வந்தது. இதுபற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து குட்டி யானையை மீட்டார்கள். பின்னர் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த தாய் யானை வனப்பகுதியில் செத்து விட்டது பற்றிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது.
இதையடுத்து, கனகபுரா அருகே முத்தத்தியில் உள்ள வனத்துறை முகாமுக்கு குட்டி யானையை அழைத்து வந்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அந்த குட்டி யானை பிறந்து 1 மாதமே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த குட்டி யானையை கிராம மக்கள் பலர் வந்து பார்த்து செல்கிறாா்கள்.