நீதித்துறை பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் தேவை: ஜனாதிபதி முன்னிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி பேச்சு


நீதித்துறை பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் தேவை: ஜனாதிபதி முன்னிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி பேச்சு
x

நீதித்துறை பணி நியமனங்களில் கண்டிப்பாக இட ஒதுக்கீடு தேவை என்று ஜனாதிபதி முர்மு முன்னிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேசினார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், ஐகோர்ட்டு வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதி முர்மு, விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருத்தா போஸ், ஜார்கண்ட் முதல்-மந்திரி சஞ்சய குமார் மிஷ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை

இந்த விழாவில் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேசும்போது கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தில் உயர் நீதித்துறை பணிகளில் பழங்குடி சமூகத்தினர் மிகக்குறைந்த அளவே இருப்பது கவலை அளிக்கக்கூடியதாகும். இந்த உயர்நீதித்துறை பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு வழி இல்லை.

இந்த பணித்தொகுப்பில் இருந்துதான் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவதால், ஐகோர்ட்டிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த மாநிலத்தில், உயர்நீதித்துறை பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story