கொரோனா தடுப்பூசிக்கான கோவின் தளம் புதிய அம்சங்களுடன் புதுப்பிப்பு
கொரோனா தடுப்பூசிக்கான கோவின் தளம் புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படுகிற 'கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க்' ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம், மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது.
தற்போது கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கோவின் தளத்தை புதுப்பிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை (யுஐபி) உள்ளடக்கியதாக இது அமையும். சோதனை ரீதியில் புதுப்பிக்கப்பட்ட கோவின் தளம் செப்டம்பர் மாதம் மத்தியில் தொடங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில் ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் பற்றிய சிறப்பு அம்சங்கள் அடுத்த கட்டங்களில் சேர்க்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story