சிவாஜிநகர் உள்பட பெங்களூரு சாலைகளில் உலா வரும் தானியங்கி கார்
பெங்களூருவில் சிவாஜி நகர் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் தானியங்கி கார் உலா வருகிறது.
பெங்களூரு:
பெங்களூரு சாலைகளில் டிரைவர் இன்றி தானாக இயங்கும் கார் ஒன்று வலம் வருகிறது. குறிப்பாக சிவாஜிநகர், பிரேசர் டவுன் சாலைகளில் இந்த காரை காண முடிகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது இந்த கார் டிரைவர் இன்றி தானாக இயங்கும் திறன் கொண்டது. செயற்கை நுண்ணறிவு கொண்டு பெங்களூருவை சேர்ந்த மைனஸ் சீரோ என்ற கார் உற்பத்தி நிறுவனம் இதை தயாரித்து உள்ளது.
இதற்கு இசட் போட் என பெயரிடப்பட்டுள்ளது. 6 கண்காணிப்பு கேமராக்கள், 4 இருக்கை வசதிகள் கொண்ட இந்த கார் அடுத்த தலைமுறை கார்கள் வரிசையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த கார் நிறுவனத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story