வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி சுருட்டல்-வங்கி அதிகாரி அதிரடி கைது


வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி சுருட்டல்-வங்கி அதிகாரி அதிரடி கைது
x
தினத்தந்தி 17 March 2024 4:16 AM GMT (Updated: 17 March 2024 7:13 AM GMT)

கடந்த 3 ஆண்டுகளாக செயலில் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது

ஜம்மு,

காஷ்மீரை சேர்ந்த தேசிய மயமாக்கப்பட்ட தனியார் வங்கியாக ஜம்மு-காஷ்மீர் வங்கி உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரின் பவுனியில் உள்ள இந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் திருடு போவது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நீண்ட நாட்களாக பண பரிமாற்றம் நடைபெறாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் மாயமாகி இருப்பது தெரிந்தது.

இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளாக செயலில் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி செய்யப்பட்ட பணம் வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றி வந்த இஷ்விந்தர் சிங் ரன்யாலின் கணக்குக்கு வரவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இந்தநிலையில் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டிய வங்கி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.


Next Story