தொழில் அதிபரிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சம்; ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது


தொழில் அதிபரிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சம்; ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது
x

தொழில் அதிபரிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

பல்லாரி: பல்லாரியில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் மதுசூதன் கவடகி, ஆனந்த் நார்கரி. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி செலுத்த ஒரு தொழில் அதிபர் தாமதம் செய்தார். இதனால் அவரது ஜி.எஸ்.டி. கணக்கை முடக்கும் நிலை உண்டானது. இந்த நிலையில் அந்த தொழில் அதிபரை தொடர்பு கொண்டு பேசிய மதுசூதன், ஆனந்த் ஆகியோர் கணக்கை முடக்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.

பின்னர் லஞ்ச தொகை ரூ.80 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழில் அதிபர் மதுசூதன், ஆனந்த் மீது சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து தொழில் அதிபருக்கு சில அறிவுரைகள் சி.பி.ஐ. அதிகாரிகள் வழங்கினர். இந்த நிலையில் மதுசூதன், ஆனந்த்திடம் தொழில் அதிபர் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


Next Story