டெல்லியில் மதரசாவில் சிறுவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்


டெல்லியில் மதரசாவில் சிறுவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
x

டெல்லியில் மசூதிக்கு சென்று விட்டு மதரசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கலந்துரையாடினார்.


புதுடெல்லி,



டெல்லியின் கஸ்தூரிபாய் காந்தி மார்க் பகுதியில் உள்ள மசூதிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று சென்றார். அதன்பின்னர், பழைய டெல்லியில் உள்ள மதரசா ஒன்றிற்கும் அவர் சென்றார்.

இதன்பின்பு மதரசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் கலந்துரையாடினார். இதுபற்றி அகில இந்திய முஸ்லிம் இமாம் அமைப்பின் தலைவர் உமர் இலியாசி கூறும்போது, மோகன் பகவத் நாட்டின் தந்தையாக உள்ளார். மிக பெரிய சமூக அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

அவர் மதரசாவில் உள்ள குழந்தைகளுடன் உரையாடி, அவர்களுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்று கேட்டறிந்து உள்ளார் என கூறியுள்ளார்.

சிறுவர்கள் இடையே பேசிய பகவத், நாட்டின் வருங்காலம் நீங்கள் என கூறியதுடன், அதனால் உங்களது படிப்பு மற்றும் நாட்டுப்பணி ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

இதேபோன்று மதரசாவின் இயக்குனர் முகமதுல் ஹசன் கூறும்போது, மதரசாவில் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக இருந்து, ஆசிரியர் மற்றும் குழந்தைகளை பகவத் சந்தித்து பேசினார் என கூறியுள்ளார். பகவத், மதரசாவுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.


Next Story