ஆர்.எஸ்.எஸ்., தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலை பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்து


ஆர்.எஸ்.எஸ்., தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலை  பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்து
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ்; தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலையை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

விஜயாப்புரா:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சித்தராமையா கூறுகிறார். அந்த அமைப்பு தேசபக்தர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபடுவது இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் அந்த அமைப்பில் இருந்து வந்தவர்கள். அடுத்த 5 ஆண்டுகளில் பி.எப்.ஐ. அமைப்பை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அந்த அமைப்பை முழுவதுமாக அழிக்க வேண்டும்.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.


Next Story