ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் 10-ந்தேதி ஆலோசனை - மோகன் பகவத், ஜே.பி.நட்டா பங்கேற்பு


ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் 10-ந்தேதி ஆலோசனை - மோகன் பகவத், ஜே.பி.நட்டா பங்கேற்பு
x

ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

"ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய 36 அமைப்புகளின் வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது. இம்மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், குடும்ப பண்புகளை பரப்புதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், விசுவ இந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதீய கிசான் சங்கம், வித்யா பாரதி, பாரதீய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story