ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவு பார்த்த பயங்கரவாதி காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைப்பு


ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவு பார்த்த பயங்கரவாதி காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைப்பு
x

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவு பார்த்த பயங்கரவாதி விசாரணைக்கு பிறகு காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மும்பை,

காஷ்மீர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் புலவாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியை சேர்ந்த ரயீஸ் சேக் அசதுல்லா சேக் (வயது26) என்ற ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்தனர். விசாரணையில் அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையக கட்டிடத்தை உளவு பார்த்தது தெரியவந்தது.

இது தொடர்பாக புனே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு மராட்டிய பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் பயங்கரவாதி ரயீஸ் சேக் அசதுல்லா சேக்கை காவலில் எடுத்து 2 வாரங்களாக விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாாி ஒருவர் கூறியதாவது:- ரயீஸ் கடந்த ஆண்டு ஜூலை 13-ந் தேதி டெல்லியில் இருந்து மும்பை வழியாக நாக்பூருக்கு விமானம் மூலம் வந்து உள்ளார். அவர் சீதாபுல்டி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி ஆர்.எஸ்.எஸ். கட்டிடத்தை உளவு பார்த்து இருகிறார். ஆனால் அவர் எடுத்த வீடியோ தெளிவாக இல்லை. எனினும் ரயீஸ் போலீசாருக்கு பயந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். கட்டிடத்தை உளவு பார்க்க செல்லவில்லை. அவரிடம் இருந்து ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பினர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபட போட்டு இருந்த திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story