இந்திய ரூபாய் மதிப்பு சரிவா? மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்


இந்திய ரூபாய் மதிப்பு சரிவா? மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் விளக்கம்
x

வெளிநாட்டு கரன்சிகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாய் மதிப்பு நன்றாக உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புனே,

ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி, ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், புனேவில் இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:

மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில், ஏற்ற, இறக்கம் அடையாமல் இருந்தால் அது இந்திய ரூபாயாகும். மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிக நன்றாக உள்ளது. ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் முன்னேற்றங்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story