பணியின்போது உயிர் தியாகம்; 6 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி: டெல்லி அரசு அறிவிப்பு

பணியின்போது உயிர் தியாகம்; 6 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி:  டெல்லி அரசு அறிவிப்பு
x

இவர்களில் 2 பேர் இந்திய ராணுவம், 2 பேர் டெல்லி போலீஸ், ஒருவர் டெல்லி சிவில் பாதுகாப்பு மற்றும் ஒருவர் டெல்லி தீயணைப்பு துறையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், பணியின்போது வீரதீர செயல் புரிந்து, உயிரிழந்த பாதுகாப்பு வீரர்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு மந்திரிகள் அடங்கிய கூட்டத்தின்போது ஒப்புதல் வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் இருந்து கெஜ்ரிவால் அரசு, இந்த உறுதிப்பாட்டில் நிலையாக உள்ளது.

இதன்படி, கேப்டன் ஜெயந்த் ஜோஷி, மேஜர் ரகுநாத், ஏ.எஸ்.ஐ. ஓம் பிரகாஷ், புனித் குப்தா, பிரவீன் குமார் மற்றும் ஏ.எஸ்.ஐ. ராதே ஷியாம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும்.

இவர்களில் 2 பேர் இந்திய ராணுவம், 2 பேர் டெல்லி போலீஸ், ஒருவர் டெல்லி சிவில் பாதுகாப்பு மற்றும் ஒருவர் டெல்லி தீயணைப்பு துறையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் 6 பேரும் பணியின்போது வீரத்துடன் செயல்பட்டு உயிரிழந்தவர்கள். இதுபோன்று டெல்லியில் வசிக்கும் அல்லது டெல்லியில் பணிக்கு அமர்த்தப்பட்ட, அனைத்து சீருடை அணிந்த, ஆயுத படை அதிகாரிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும் வகையில் இழப்பீடு அளிக்கப்படும்.

Next Story