ஓரினச்சேர்க்கை திருமண அங்கீகாரம் குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு 18-ந்தேதி விசாரிக்கிறது


ஓரினச்சேர்க்கை திருமண அங்கீகாரம் குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு 18-ந்தேதி விசாரிக்கிறது
x

ஓரினச்சேர்க்கை திருமண அங்கீகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு 18-ந்தேதி விசாரிக்கிறது.

வெளிநாடுகளில் உள்ளதுபோல ஓரினச்சேர்க்கை உறவுமுறை அதாவது ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் திருமணம் செய்துகொள்வது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

இந்த திருமணத்துக்கு சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை கடந்த மாதம் 13-ந்தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும், ஏப்ரல் 18-ந்தேதி வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வருகிற 18-ந்தேதி விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில், 'ஓரினச்சேர்க்கை திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக்கூடாது, இதை இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது' என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Next Story