சனாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.!


சனாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.!
x
தினத்தந்தி 15 Sep 2023 7:13 AM GMT (Updated: 15 Sep 2023 7:33 AM GMT)

சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியின் போது சனாதனத்தை பற்றி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. உதயநிதியின் கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சனாதனத்திற்கு எதிராக நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர்களாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த மாநாட்டின் பின்புலம் பற்றி விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யபட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு முறைப்படி பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வருமா அல்லது அவசர வழக்காக விசாரணைக்கு வருமா என்பது வழக்கறிஞர் முறையிடுவதன் அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story