உத்தவ் தாக்கரேவுடன் சஞ்சய் ராவத் சந்திப்பு


உத்தவ் தாக்கரேவுடன்  சஞ்சய் ராவத் சந்திப்பு
x

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்தார். ஆதித்ய தாக்கரே சஞ்சய் ராவத்தை வீட்டுக்கு வெளியில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

மும்பை,

இதுபோன்ற பழிவாங்கும் அரசியலை பார்த்து இல்லை என சஞ்சய் ராவத் வேதனை தெரிவித்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி பத்ரா சால்குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மும்பை ஆர்தர் ேராடு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவர் சுமார் 100 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவர் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்தார். ஆதித்ய தாக்கரே சஞ்சய் ராவத்தை வீட்டுக்கு வெளியில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

முன்னதாக ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் சஞ்சய் ராவத் கூறியதாவது:- வீர சாவர்க்கர், திலகர் போல நானும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டாலும், நான் எனது நேரத்தில் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தி கொண்டேன். எனது கட்சி, குடும்பம் மற்றும் நான் இதை எல்லாம் சகித்து கொள்ள வேண்டும். நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது குடும்பம் பலவற்றை இழந்து உள்ளது. வாழ்க்கை மற்றும் அரசியலில் இது நடக்க தான் செய்யும். ஆனால் நாடு இதுபோன்ற அரசியலை ஒருபோதும் பார்த்து இல்லை" என்றார்.


Next Story