ஆந்திராவில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு; 22-ந்தேதி பள்ளிகள் திறப்பு


ஆந்திராவில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு; 22-ந்தேதி பள்ளிகள் திறப்பு
x

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி, கடந்த 9-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி (இன்று) வரை 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தியை முன்னிட்டு பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் (19 மற்றும் 20) ஆகிய இரு நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 21-ந்தேதி ஞாயிறு விடுமுறை ஆகும்.

இதனால், வருகிற 22-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான விடுமுறை நீட்டிப்பு உத்தரவை அரசு வெளியிட்டது. ஆசிரியர் மற்றும் பெற்றோர் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

எனினும், அயோத்தியில் ராமர் கோவில் விழாவை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 22-ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்றும் 23-ந்தேதி கல்வி மையங்கள் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான உத்தரவு எதுவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி, இதற்கு முன்பு கடந்த 9-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி (இன்று) வரை 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.


Next Story