பரிசு அனுப்பி வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் `அபேஸ்'; போலீசில் புகார்


பரிசு அனுப்பி வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் `அபேஸ்; போலீசில் புகார்
x

பரிசு அனுப்பி வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் `அபேஸ்'; செய்த மர்மநபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சாகர் சவலங்கா பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கார் ஒன்றை வாங்கினார். இந்த நிலையில் மர்மநபர் ஒருவர், அந்த பெண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்பு ெகாண்டு பேசினார். அப்போது மர்மநபர், புதிதாக கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் சார்பில் பரிசு பொருட்கள் அனுப்பி வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், டவுன் பகுதியில் உள்ள ஓட்டலில் 3 நாட்கள் தங்கி மகிழலாம் என்றார். இதற்காக ரூ.1 லட்சத்தை அனுப்பி வைக்குமாறு கூறினார். அதை நம்பிய பெண், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்தை பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார். பின்னர், அவர் பரிசு பொருட்கள் குறித்து கேட்பதற்காக மர்மநபரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், இதுகுறித்து தான் கார் வாங்கிய நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது தான் மர்மநபர் பரிசு அனுப்புவதாக கூறி ரூ.1 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இதுகுறித்து துங்கா நகா் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story