முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 7 நாட்கள் விசாரித்தது.
கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விசாரணையின்போது அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) அளிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story