அசாமில் நிவாரண முகாம்களாக மாறும் பள்ளிகள்; வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் பலி


அசாமில் நிவாரண முகாம்களாக மாறும் பள்ளிகள்; வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் பலி
x

அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ளம் மற்றும் நில சரிவுகளில் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.



கவுகாத்தி,



அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.

அசாமின் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ளன. அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ளம் மற்றும் நில சரிவுகளில் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை மொத்தம் 2,84,875 பேர் மீட்கப்பட்டு 1,395 நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், அசாம் கல்வி துறை வெளியிட்டுள்ள செய்தியில், கோடை விடுமுறை ஜூலை 1ந்தேதி தொடங்கி 31ந்தேதி முடிவடைவதற்கு பதிலாக, ஜூன் 25ந்தேதி தொடங்கி ஜூலை 25ந்தேதி முடிவடையும் என தெரிவித்து உள்ளது.

இதன்படி அசாமிலுள்ள அனைத்து முதனிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலை பள்ளிகளுக்கும் கோடை கால விடுமுறை தின காலஅட்டவணை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

அசாமில் தொடர் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு உள்ளன. பள்ளி கூடங்களில் பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்து உள்ளன. இதன் எதிரொலியாக பள்ளி கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என துறையின் செயலாளர் பாரத் பூஷண் கூறியுள்ளார்.


Next Story