காஷ்மீரில் நடத்தப்பட்ட போராட்டம்; போலீஸ் தடியடி


காஷ்மீரில் நடத்தப்பட்ட போராட்டம்; போலீஸ் தடியடி
x

காஷ்மீரில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் உள்ள சரோர் சுங்கச்சாவடி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று முன்தினம் சரோர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி யுவ ராஜ்புத் சபா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சரோர் சுங்கச்சாவடியை உடனடியாக மூடக்கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் யுவ ராஜ்புத் சபா அமைப்பினர் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சுங்கச்சாவடி மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.


Next Story