மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது


மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 21 Oct 2023 6:09 AM IST (Updated: 21 Oct 2023 6:32 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஆயுத குவியலை கண்டுபிடித்தனர்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே 3-ந் தேதி குகி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். தொடர்ந்து அங்கு ஆங்காங்கே வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சாந்திபூர், காமன்லோக் மற்றும் வாகான் பகுதிகளில் நடத்திய சோதனையில் ஆயுத குவியலை கண்டுபிடித்தனர்.

4 ஏகே47 ரக எந்திர துப்பாக்கிகள், 18 தானியங்கி துப்பாக்கிகள், 1,615 வெடிகுண்டுகள், 82 கையெறி குண்டுகள், 14 ராக்கெட் லாஞ்சர்கள், ஆறு கைத்துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், வாக்கி டாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story