பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன காவலாளி தற்கொலை; துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்
பெங்களூருவில் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன காவலாளி தற்கொலை செய்துகொண்டார். அவர், துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்.
பெங்களூரு:
பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. இங்கு கரேகவுடா (வயது 49) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கரேகவுடா பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று காலை 7 மணியளவில் தான் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் கரேகவுடா தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பையப்பனஹள்ளி போலீசார் அங்கு சென்று கரேகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கரேகவுடா துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தற்கொலைக்கான காரணம் என்ன தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story