மங்களூரு, உடுப்பி, சிவமொக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1¾ கோடி போதைப்பொருட்கள் அழிப்பு


மங்களூரு, உடுப்பி, சிவமொக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட  ரூ.1¾ கோடி போதைப்பொருட்கள் அழிப்பு
x

மங்களூரு, உடுப்பி, சிவமொக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1¾ கோடி போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது.

மங்களூரு;

போதைப்பொருட்கள் அழிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர எல்லைக்கு உட்பட்டு 15 போலீஸ் நிலையங்கள் உள்ளது. கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை கண்டறிந்து அதனை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் 15 போலீஸ் நிலையங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதில் 580 கிலோ கஞ்சா, 25 கிராம் ஹெராயின், 320 கிராம் எம்.டி.எம். அடங்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.1.28 கோடி ஆகும்.இந்த நிலையில் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மங்களூருவில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.


அதன்படி நேற்று காலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார், இணை கமிஷனர் ஹரிராம் தலைமையில் முல்கி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு எந்திரம் மூலம் அனைத்து போதைப்பொருட்களும் கொட்டி அழிக்கப்பட்டது.


உடுப்பியில்...

இதேபோல் உடுப்பி மாவட்ட போலீஸ் நிலையங்களில் ரூ.3.27 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள், போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் தலைமையில் நந்திகூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஊழியர்கள் மூலம் எந்திரத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் சிவமொக்கா மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மாச்சேனஹள்ளி பகுதியில் மருத்துவக்கழிவுகளை எரிக்கும் கிடங்கில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

மங்களூரு, உடுப்பி, சிவமொக்காவை சேர்த்து சுமார் ரூ.1¾ கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story