ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை - 2 பேர் கைது


ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை - 2 பேர் கைது
x

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்,

கர்நாடக மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களை கலந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த தகவல் போலீசாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் பார்லரில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்வது குற்றம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story