செங்கோல் விவகாரம்: திருக்குறளை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் கருத்து


செங்கோல் விவகாரம்: திருக்குறளை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் கருத்து
x

புதிய நாடளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றன.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளுவர் அரசனுக்கு தேவையான நான்கு குணங்களில் ஒன்றாக 'செங்கோலை' வைத்தார்-குறள் 390 (செங்கோல்: செங்கோன்மை). மற்ற மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களை காத்தல். குறள் 546-ல் அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார். 'வேல் அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாதெனின்' (கோடாத கோல்: வளையாத செங்கோல்) 2023-ம் ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாள் வரை பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. மணிப்பூர் மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டுமோ?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story