ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட தாமிர கம்பிகளை திருடிய 3 பேர் கைது


ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட தாமிர கம்பிகளை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:45 PM GMT)

ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட தாமிர கம்பிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

பெங்களூரு-சிவமொக்கா-தாளகொப்பா இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மின்மயமாக்கும் பணிக்காக ரெயில் தண்டவாளத்தின் அருகே கம்பங்கள் நட்டு தாமிர கம்பிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிவமொக்கா மாவட்டம் சாகர் பகுதியில் மின்மயமாக்கும் பணிக்காக ரெயில் தண்டவாளத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த தாமிர கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மைசூரு மண்டல போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரெயில் பாதையில் தாமிர கம்பிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தாமிர கம்பிகளை வாங்கிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள், கும்சி பகுதியை சேர்ந்த நூருல்லா, மஞ்சு, ஹரீஷ், நாராயணா, ஞானேஸ்வர் என்பது தெரியவந்தது. இவர்களில் நாராயணா, ஞானேஸ்வர் தான் தாமிர கம்பிகளை வாங்கி உள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ தாமிர கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story