"தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும்" - உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்


தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் - உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 May 2023 12:11 PM IST (Updated: 5 May 2023 6:36 PM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத் பவார் நீடிக்க வலியுறுத்தி உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என அரசியில் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 More update

Next Story