மராட்டியம்: ஏக்நாத் ஷிண்டே அரசு "சட்டவிரோதமானது", நீண்ட காலம் நீடிக்காது - ஆதித்யா தாக்கரே


மராட்டியம்: ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது, நீண்ட காலம் நீடிக்காது - ஆதித்யா தாக்கரே
x
தினத்தந்தி 7 Aug 2022 1:16 AM GMT (Updated: 7 Aug 2022 1:17 AM GMT)

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு "சட்டவிரோதமானது" என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு "சட்டவிரோதமானது" என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்த எம்.எல்.ஏக்கள் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் அவர்கள் மீது வருத்தமாக உள்ளது. துரோகிகள் என கூறுவதை அவர்களை விரும்பவில்லை. அவர்கள் பால்தாக்கரேவின் உண்மையான தொண்டர்களாக இருந்திருந்தால், அசாமில் வெள்ளம் ஏற்பட்டபோது, ஓட்டல் அறையில் இருந்துகொண்டு மலைகளையும், இயற்கையையும் ரசிக்காமல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காக களத்தில் இறங்கியிருப்பார்கள்.

உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் போது, கோவாவில் உள்ள பாரில் இருந்தவாறு நடனமாடினர். இவர்கள் எப்போதும் துரோகிகளாகவே இருப்பார்கள். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு "சட்டவிரோதமானது" இதனால் அது நீண்ட காலம் நீடிக்காது.

மகா விகாஸ் அகாதி தலைமையின் கீழ் நடைபெற்ற மாநிலத்தின் முன்னேற்றத்தை அவர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு, மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிவந்த உத்தவ் தாக்கரே போன்ற நல்ல மனிதருக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர்." இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Next Story