இந்தியா- இலங்கை இடையே விரைவில் தொடங்கவிருக்கும் கப்பல் சேவை..


இந்தியா- இலங்கை இடையே விரைவில் தொடங்கவிருக்கும் கப்பல் சேவை..
x
தினத்தந்தி 13 April 2023 1:07 PM GMT (Updated: 13 April 2023 1:09 PM GMT)

இலங்கை, இந்தியா இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு, கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

புதுடெல்லி,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஒட்டி, காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது.

இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு, கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே, ஆயிரம் சதுர மீட்டர் பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் 60 ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் 29ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story