சிவசேனா தலைவர் துப்பாக்கி சூட்டில் பலி


சிவசேனா தலைவர்  துப்பாக்கி சூட்டில் பலி
x
தினத்தந்தி 4 Nov 2022 11:04 AM GMT (Updated: 4 Nov 2022 11:48 AM GMT)

பஞ்சாப் அமிர்தசரசில் சிவசேனா தலைவர் துப்பக்கியால் சுட்டுக்கொலை

அமிர்தசரஸ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஒரு கோவிலின் சிலைகள் சேதபட்டுத்தபட்டன. கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து சிவசேனா போராட்டம் நடத்தியது.

கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச போச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சூரியை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பக்கியால் சுட்டார். இதில் சூரி படுகாயம் அடைந்தார்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூரி ஹிட் லிஸ்டில் இருப்பதாகவும், அவருக்கு ஏற்கனவே மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கூட்டத்தினர் பிடித்தனர், பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் தஜிந்தர் சிங் பக்கா கூறும் போது பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. அமிர்தசரசில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி காயமடைந்தார்" என்று கூறி உள்ளார்.


Next Story
  • chat