சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்


சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்
x

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எம்.எல்.ஏ. அனில் பாபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கானாப்பூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அனில் பாபர். இவர் தற்போது மராட்டியத்தை ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர். மேலும், இவர் கானாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சில நாட்களாக இவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சாங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அனில் பாபரின் திடீர் மறைவால் இன்று மாராட்டிய மாநிலத்தில் நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மறைவை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அனில் பாபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதவி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "கானாப்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார். அவரது மறைவின் மூலம் சிவசேனாவின் சமூக தொண்டு செய்யும் மிகவும் திறமையான மக்கள் பிரதிநிதியை இழந்துள்ளோம். அனில் பாபரின் இறுதிச் சடங்குகளை ஒரு அரசு நிகழ்வாக நடத்த, நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கானாப்பூர் தொகுதியில் சிவசேனாவுக்காக அவர் செய்த பணிகள் மறக்க முடியாதவை. வீடற்றவர்களுக்கு வீடு வழங்க முயற்சிப்பது, ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்வது, கிருஷ்ணா பள்ளத்தாக்கு நீர் திட்டத்தை செயல்படுத்துவது, அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வது என தனது பணிகள் மூலம் அனில் பாபர் ஒரு முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக பணியாற்றினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story