விதிகளை மீறி பாதயாத்திரை: இன்று நேரில் ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்

Image Courtesy: PTI
விதிகளை மீறி மேகதாது பாதயாத்திரை மேற்கொண்டதற்காக, இன்று நேரில் ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
பெங்களூரு,
மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது ராமநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா 24-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி அந்த சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த கோர்ட்டில் சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராக உள்ளார்.
Related Tags :
Next Story






