கோலார் காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய சித்தராமையா ஆதரவாளர்கள்


கோலார் காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய சித்தராமையா ஆதரவாளர்கள்
x

கோலார் காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய சித்தராமையா ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருவதால், டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் வேறு கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையா முடிவு செய்திருந்தார். ஆனால் கோலார் தொகுதி பாதுகாப்பானது கிடையாது என கட்சி மேலிடம் சித்தராமையாவை வருணாவில் போட்டியிட வலியுறுத்தியது. அதன்படி வருணா தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனாலும், கோலார் தொகுதியிலும் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கிரசின் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கோலார் தொகுதியில் கொத்தூர் மஞ்சுநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சித்தராமையாவுக்கு கோலார் தொகுதியில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வந்தவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாகவும், சித்தராமையாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதாகவும் சித்தராமையா ஆதரவாளர்கள் ஆக்ஷோசம் அடைந்தனர். நேற்று கோலாரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற சித்தராமையா ஆதரவாளர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அனில்குமார் எம்.எல்.சி. உள்பட 3 பேரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் செயல் தலைவர் நசீர் அகமது அங்கு வந்து தொண்டர்களை சமாதானப்படுத்தினார். காயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story