சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 6 பேர் உயிரிழப்பு


சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி  சுற்றுலாப்பயணிகள் 6 பேர் உயிரிழப்பு
x

சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.

சிக்கிம் மாநிலம் கேங்க்டாங் பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலாப்பகுதியாகும். அங்குள்ள பனி படர்ந்த இடங்களில் மக்கள் அதிகம் அளவில் சுற்றுலாவிற்கு விரும்பி செல்கின்றனர். இந்த நிலையில், கேங்டாங்ங்கை நதுலா என்ற இடத்துடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 15-வது மைல் தொலைவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சுற்றுலாப்பயணிகள் 150 க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

விரைந்து வந்த மீட்புக்குழுவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 13-வது மைல் தொலைவு வரை மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் சுற்றுலாப்பயணிகள் அனுமதியின்றி 15-வது மைல் பகுதிக்கு சென்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story