144 தடை உத்தரவு எதிரொலி: சிவமொக்கா நகர் வெறிச்சோடியது


144 தடை உத்தரவு எதிரொலி: சிவமொக்கா நகர் வெறிச்சோடியது
x

144 தடை உத்தரவு எதிரொலியாக சிவமொக்கா நகர் வெறிச்சோடியது. அத்தியவாசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

சிவமொக்கா:

144 தடை உத்தரவு எதிரொலியாக சிவமொக்கா நகர் வெறிச்சோடியது. அத்தியவாசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடியது

சிவமொக்காவில் சுதந்திர தினத்தன்று வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டதை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால், சிவமொக்கா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று மதியம் 3 மணி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த தடை உத்தரவு காரணமாக இன்று சிவமொக்கா நகர் வெறிச்சோடியது. ஊரடங்கு போன்று அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. ஆனால், மருந்து கடை, பால் கடை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்திருந்தன.

கலெக்டர் உத்தரவு

வங்கி, அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். நேற்று காலை சிவமொக்கா நகரில் முக்கியமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வெளியே வர வேண்டாம் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இன்று வரை சிவமொக்கா நகரில் கூட்டங்கள் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் நகரில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story