வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணத்துக்கு தீர்வு - நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை


வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணத்துக்கு தீர்வு - நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை
x

வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாத வங்கிக்கணக்குகளில், யாரும் உரிமை கோராத ரூ.35 ஆயிரம் கோடி டெபாசிட் இருந்தது. அந்த பணத்தை கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கியிடம் பொதுத்துறை வங்கிகள் ஒப்படைத்தன.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், உரிமை கோரப்படாத டெபாசிட் தொகையை என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட், பங்குகள், ஈவுத்தொகை, பரஸ்பர நிதியம், காப்பீட்டு பணம் ஆகியவற்றுக்கு தீர்வு காண காலக்கெடுவுடன் கூடிய சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளை அக்கவுன்சில் கேட்டுக்கொண்டது. தங்களிடம் உள்ள நியமனதாரர் விவரங்களை பயன்படுத்தி, அப்பணத்துக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியது.


Next Story