இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றால் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன் தினம் 1,569 நேற்று 1,829 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,364 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,549 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,87,259 லிருந்து 4,25,89,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,303 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,647 லிருந்து 15,419 ஆனது.
இந்தியாவில் இதுவரை 191.79 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 13,71,603 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story