ரெயிலில் புகை: பயணிகள் அதிர்ச்சி - ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு


ரெயிலில் புகை: பயணிகள் அதிர்ச்சி - ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு
x

ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந்தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டிமோதிக் கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது. ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள பர்கார் மாவட்டத்தில் தனியார் சரக்கு ரெயில் ஒன்று நேற்று தடம்புரண்டது. இதனால் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்தநிலையில்,

ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story