பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடி வீரர்;உதட்டை கடித்தது


பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடி வீரர்;உதட்டை கடித்தது
x

ஆக்ரோஷமாக இருந்த அந்த பாம்பு அவரது உதட்டை கொத்தியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவின் அருகே குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்துள்ளது. உடனே பாம்பு பிடிக்கும் நபருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வருவதற்குள் பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. பின்னர், ஒருவழியாக பாம்பை பிடித்துள்ளார். இதனையடுத்து, பாம்பை பிடித்து விட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார்.

அப்போது, ஆக்ரோஷமாக இருந்த அந்த பாம்பு அவரது உதட்டை கொத்தியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story