ஒடிசா ரெயில் விபத்து: உண்மை வெளிவந்தாக வேண்டும்: மம்தா பானர்ஜி
ஒடிசா ரெயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்து ஆறுதல் கூறிய மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்தவர்களில் 103 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் குறித்த தகவல் இல்லை. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிவந்தாக வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story