சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது - தலைமை நீதிபதி சந்திரசூட்


சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது - தலைமை நீதிபதி சந்திரசூட்
x

ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் இந்தியா மேன்மையுடன் செயல்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"உலகம் முழுவதும் இன்று நாம் காணும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் பல நாடுகள் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் அவற்றில் பல நாடுகளால் உண்மையான தன்னாட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அதே சமயம் இந்தியாவால் அதன் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடிந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா தன்னாட்சி மற்றும் ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் மேன்மையுடன் செயல்படுகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story