காஷ்மீரில் பூஜை செய்து, தீபமேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடிய ராணுவ வீரர்கள்


காஷ்மீரில் பூஜை செய்து, தீபமேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடிய ராணுவ வீரர்கள்
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பூஜை செய்து, தீபமேற்றி, தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.



அக்னூர்,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்து கொண்டார். நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும், எல்லையில் பாதுகாப்பு பணியில் கண்காணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் கவலைப்படாமல் முழு மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி ராணுவ வீரர் ஒருவர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்கள் ஒன்றாக பூஜை செய்து, எண்ணெய் விளக்குகளில் தீபமேற்றி, புஸ்வாணம் உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.


Next Story